Endhiran Special Graphics Effect
டி கன்வர்ஷன், எடிட்டிங், டப்பிங், ஒலிக்கலவை, கிராபிக்ஸ் சேர்ப்பு உள்ளிட்ட போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை – சாலிக்கிராமம் மற்றும் கேரள மாநிலம் கொழக்குட்டோமில் உள்ள பிரசாத் லேபுகளில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன
அனைத்து பணிகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்து FIRST COPY ரெடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேகமாக நடைபெற்றுவருகின்றன. எப்படியும் தீபாவளிக்கு (நவம்பர் 5) ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
எந்திரன் சில சிறப்பம்சங்கள்
* படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.150 கோடிகள். தமிழ் திரையுலக வரலாற்றில் – ஏன் இந்திய திரையுலக வரலாற்றில் இத்துனை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படம் இதுவே.
* சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கேரியரில் அதிகபட்ச ஊதியம் பெறும் படம் எந்திரன் தான்.
* தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அதிக பட்ச ஊதியம் வழங்கப்படும் முதல் படம் எந்திரன் தான்.
* இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு படத்தின் கதாநாயகிக்கு அதிகபட்ச ஊதியம் வழங்கப்படுவதும் எந்திரனுக்காகத்தான்.
* சென்னை நகரில் அதிகபட்ச திரையரங்குகளில் திரையிடப்படும் படம் எந்திரன் தான்.
* அதேபோல உலகம் முழுதும் அதிகபட்ச திரையரங்குகளில் ரிலீச்சாகும் திரைப்படமும் எந்திரன் தான்.
* இதுவரை நடித்த படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி மேக்கப்புக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டது எந்திரனுக்காகத்தன். (ரோபோ கெட்டப் காரணமாக!)
* சூப்பர் ஸ்டார் ரஜினி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் 9வது படம் எந்திரன். (ஜானி, ராஜாதி ராஜா போல). இங்கு டபுள் ஆக்க்ஷன் என்பது ஒரே நேரத்தில் இரு காரக்டர்களையும் திரையில் பார்க்கும் விதத்தில் வருவது எனக் கொள்க.
* பில்லா, தர்மத்தின் தலைவன் போன்று டபுள் ரோல்களை கணக்கில் எடுத்தால் எந்திரன் 12 வது படம்.
* 3D கண்ணாடிகளை பொறுத்தவரை Use & Throw வகையிலான மலிவான ஆனால் (தரமான) Film கண்ணாடிகளை தருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
* உலகத் தரத்திற்கு இணையாக பல தொழில் உயர் நுட்பங்களை முதல் முறையாக தமிழ் திரையுலகில் பயன்படுத்தும் படமும் ‘எந்திரன்’ தான்.